Thursday, August 2, 2012

ப்ளாக் தொடங்கி பதிவு எழுதியாச்சு அடுத்து என்ன -பாடம் 7


முந்தைய பாடங்களில் ப்ளாக் தொடங்குவது எப்படி ,பதிவு எப்படி எழுதுவது 

வாசகர்களை எப்படி வரவைப்பது டெம்ப்ளேட்யில்  எப்படி எடிட் செய்வது 

டெம்ப்ளேட் எப்படி அப்லோட் செய்வது ,கேட்ஜெட் எப்படி சேர்ப்பது என்று 

முந்தைய பதிவுகளில் பார்த்தோம் படிக்காதவர்கள் படிக்கவும்

புதியவர்கள் என்ன முக்கியமாக  தெரிஞ்சு இருக்க வேண்டுமோ அதை

எல்லாம் முந்தைய பதிவுகளில் பார்த்தாச்சு இனி நாம் பதிவு எழுதி கொண்டே

இருக்கிறோம் யார் படிக்கிறார்கள் எந்த பதிவு அதிகமாக வசிக்க  பட்டுள்ளது

எந்த தளத்தில் இருந்து நமது தளத்திற்கு வாசர்கள் வருகிறார்கள் என்று

தெரிஞ்சு வேண்டாமா உதாரணமாக நாம் எழுதும் எந்த பதிவு வாசகர்கள்

அதிகமாக படித்து இருகிறார்கள் என்று நமக்கு தெரிந்தால் அதை சார்ந்தே நாம்

பதிவு எழுதி வாசகர்களை அதிகபடுத்த மற்றும் கவர முடியும் அல்லவா

வாங்க பதிவுக்கு போகலாம் 

முதலில் உங்களுடைய பிளாக்கர் டஷ்போர்ட் பகுதிக்கு செல்லவும் 

அடுத்து status என்பதை  கிளிக் செய்யவும் அதில் முதலில் உள்ள overview 

என்பதை கிளிக் செய்யவும் அதில் உங்கள் தளத்தில் வந்தவர்கள் அதிகமாக 

படிக்கப்பட்ட ஐந்து பதிவுகள் மற்றும் எந்த தளத்தில் இருந்து உங்கள் 

தளத்திற்கு வந்தார்கள் என்று அனைத்து தகவல்களும் ஓரே பக்கத்தில் 

சந்தேகம் இருந்தால் கிழே உள்ள படத்தை பார்த்து தெரிந்து கொள்ளவும் 



அடுத்து அதே பக்கத்தில் overview கிழே உள்ள போஸ்ட் அழுத்தவும் 

இதில் உங்களுடைய  எந்த பதிவு அதிகமாக படிக்க பட்டுள்ளது என்று தெரிந்து 

கொள்ளலாம் சந்தேகம் இருந்தால் கிழே உள்ள படத்தை பார்க்கவும்  மேலே 

உள்ள all time என்று அழுத்தினால் நீங்கள் ப்ளாக் ஆரம்பித்த நாட்களில் இருந்து 

இன்று முதல் அதிகம் படிக்க பட்ட ஐந்து பதிவுகளை காட்டும்

சந்தேகம் இருந்தால் கிழே உள்ள படத்தை பார்த்து தெரிந்து கொள்ளவும் 



அடுத்து அதே பக்கத்தில் status கிழே உள்ள  trafic sources அழுத்தவும் அதில் 

உங்கள் தளத்திற்கு எந்த தளத்தில் இருந்து வந்தார்கள் என்று தெரிந்து 

கொள்ளலாம் சந்தேகம் இருந்தால் கிழே உள்ள படத்தை பார்க்கவும் மேலே


உள்ள all time என்று அழுத்தினால் நீங்கள் ப்ளாக் ஆரம்பித்த நாட்களில் இருந்து

இன்று முதல் தகவல் அனைத்தும் காட்டும்






அடுத்து அதே பக்கத்தில் status கிழே உள்ள  audience அழுத்தவும் அதில் உங்கள்

தளத்திற்கு உங்கள் தளத்திற்கு எந்த உலாவில் இருந்து வந்தார்கள்

எந்த நாட்டில் இருந்து வந்தார்கள்  என்று தெரிந்து கொள்ளலாம் சந்தேகம்

இருந்தால் கிழே உள்ள படத்தை பார்க்கவும் மேலே உள்ள all time என்று

அழுத்தினால் நீங்கள் ப்ளாக் ஆரம்பித்த நாட்களில் இருந்து இன்று முதல்

தகவல் அனைத்தையும் காட்டும்







குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்

No comments:

Post a Comment

சந்தேகம் கேட்கும் நபர்கள் கமென்ட் பாக்ஸ் அருகில் உள்ள

Subscribe by email அழுத்தி விட்டு கேள்வியை கேட்கவும்

Trending Topic